7 பேர் விடுதலை: அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக வைத்த 10 கோரிக்கைகள் இதுதான்

 

7 பேர் விடுதலை: அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக வைத்த 10 கோரிக்கைகள் இதுதான்

மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாமக, 10 கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாமக, 10 கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.

மக்களவை தேர்தல் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வழங்குகிறது அதிமுக. இந்த கூட்டணியை ஏற்று, பாமக 10 கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அதனை அதிமுகவும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

1) காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வேண்டும்

2) 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் 

3) தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

4) படிப்படியாக மதுவிலக்கு, 500 கடைகளை மூட வேண்டும் 

5) மணல் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும் 

6) மேகதாது அணை கட்டும் சதியை முறியடிக்க வேண்டும் 

7) பொதுத்துறை கூட்டுறவு வங்கிகள் பெறப்பட்ட விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் 

8) நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்

9) அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

10) கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் மற்றும் 20 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் ஆகிய பத்து கோரிக்கைகளை முன்வைத்து அதிமுக உடனான கூட்டணிக்கு பாமக சம்மதித்திருக்கிறது. இந்த பத்து கோரிக்கைகளையும் அதிமுக நிறைவேற்றும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.