7 பேரை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

 

7 பேரை  விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் ஏழு பேரை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் ஏழு பேரை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் கைதிகளாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளனர். இதனால் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுவிக்கக் கோரி, கடந்த பிப்ரவரியில் அரசுக்கு நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

nalini

இந்த வழக்கானது நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் நடைபெற்று வந்தது. அதில், 
7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிராக வாதிட்ட அரசு தரப்பிலோ, முன்கூட்டி விடுதலை செய்யவேண்டும் என்று உரிமையாகக் கோர முடியாது. அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என்று தெரிவித்தது. 

hc

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,  ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் ஏழு பேரை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தற்போது மகள் திருமணத்திற்காக நளினி பரோலில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.