7 பேரை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்: திருநாவுக்கரசர்

 

7 பேரை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்: திருநாவுக்கரசர்

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பலரும் தங்களது வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றார்.

முன்னதாக இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை ராகுல் காந்தி மன்னித்துவிட்டார் என கூறியது குறிப்பிடத்தக்கது.

#rajivgandhi #rajivgandhimurder #perarivalan #thirunavukarasar