‘7 நிமிடங்களில் கைவரிசையைக் காட்டுவோம்’ : புழல் சிறையில் கம்பி எண்ணும் திருடர்கள்!

 

‘7 நிமிடங்களில் கைவரிசையைக் காட்டுவோம்’ : புழல் சிறையில் கம்பி எண்ணும் திருடர்கள்!

சென்னையில் தரமணி, சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பிரதான இடங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை, பைக் திருட்டு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.

சென்னையில் தரமணி, சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பிரதான இடங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை, பைக் திருட்டு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இது குறித்து அப்பகுதி காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் நோட்டமிட்டு ஒன்றரை ஆண்டுகளாகத் திருடி வந்த பூபதி ராஜா மற்றும் பிரசாந்த் என்ற இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Bupathi raja

அதில், அவர்கள் இருவரும் இரவு நேரங்களில் ஆள் இல்லாத போது சென்று நோட்டமிட்டு விட்டு வீட்டிற்கு வந்து விடுவோம். பிறகு காலையில் சென்று நகைகளைத் திருடி வந்து, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள நகைக் கடை ஒன்றில் உடனே விற்று விடுவோம் என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, 5 முதல் 7 நிமிடங்களிலே அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் அவர்களிடமிருந்து 80 சவரன் தங்க நகைகள், லேப்டாப், பைக், திருட்டுக்குப் பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.  

Saidapet

இவர்கள் மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் பதிவாகி இருந்ததையும், பூபதி ராஜா கடந்த 2017 ஆம் ஆண்டு சிறைத் தண்டனையிலிருந்து வெளியே வந்துள்ளதையும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பூபதி ராஜா மற்றும் பிரசாந்த் மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி காவல்துறையினர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.