7 ஆண்டுகளாக ஒரு அங்குலம் கூட நகராத விசித்திர உயிரினம்

 

7 ஆண்டுகளாக ஒரு அங்குலம் கூட நகராத விசித்திர உயிரினம்

போஸ்னியா நாட்டில் ஒரு உயிரினம் 7ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் முழுமையாக ஓய்வெடுப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சரஜிவோ: போஸ்னியா நாட்டில் ஒரு உயிரினம் 7ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் முழுமையாக ஓய்வெடுப்பது கண்டறியப்பட்டுள்ளது.

போஸ்னியா நாட்டில் உள்ள குகை ஒன்றில் வசிக்கும் சாலமண்டர் என்ற உயிரினம் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் முழுமையாக ஓய்வெடுப்பது கண்டறியப்பட்டுள்ளது. பல்லி போன்ற உருவம் கொண்ட இந்த உயிரினம் கடந்த 2,569 நாட்களுக்கும் மேலாக இருந்த இடத்தை விட்டு கொஞ்சம்கூட நகராமல் அப்படியே ஓய்வெடுத்து வருகிறது. இந்த தகவலை பிரபல நியூயார்க் டைம்ஸ் போஸ்ட் வெளியிட்டுள்ளது. ஒரு அடி நீளம் கொண்ட சாலமண்டர் உயிரினம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழக் கூடியது என்று கூறப்படுகிறது.

ttn

மேலும் பல நாட்கள் உணவு இல்லாமலே சாலமண்டர்கள் உயிர் வாழக் கூடிய திறனை பெற்றுள்ளன. பொதுவாக இந்த உயிரினம் ஓராண்டு வரை மட்டுமே ஒரே இடத்தில ஓய்வு எடுக்கும். ஆனால், ஆச்சர்யத்தக்க வகையில் போஸ்னியாவில் இந்த உயிரினம் 7 ஆண்டுகளாக தன்னுடைய மூன்று விரல்களில் ஒன்றைக் கூட அசைக்காமல் பிசின் போல குகைக்குள் ஓட்டிக் கொண்டுள்ளது. எப்போது தனக்கேற்ற துணை தேவைப்படுகிறதோ அப்போதுதான் இந்த உயிரினம் நகர ஆரம்பிக்கும். அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இந்த உயிரினத்தில் வாழ்நாளில் இது நிகழும் என்று கூறப்படுகிறது.