இந்தியா முழுவதும் 6 மாதங்கள் ஊரடங்கு அமலில் இருக்குமா?

 

இந்தியா முழுவதும் 6 மாதங்கள்  ஊரடங்கு  அமலில் இருக்குமா?

பிரதமர் நரேந்திரமோடி இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் மூலமாக இந்தியா முழுவதும் நவம்பர் 4ம் தேதி வரைக்கும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சூசகமாக சொல்லியிருப்பதாக பரபரப்பு பேச்சு எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் 6 மாதங்கள்  ஊரடங்கு  அமலில் இருக்குமா?

கொரோனா இரண்டாவது அலையினால் ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கினை அறிவித்து அதை நீட்டித்தும் வருகிறது. ஊரடங்கு காரணமாக நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு முதல் தவணையாக 2 ஆயிரம் பணம் வழங்கியது. அடுத்த தவணையாக 2 ஆயிரம் இம்மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 14 மளிகை பொருட்கள் வழங்க உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும்14ம்தேதிக்கு பின்னர் ஊரடங்கு நிறைவுபெறுமா என்கிற எண்ணத்தில் மக்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கொரோனா மூன்றாவது அலை செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்ற அச்சமும் நிலவுகிறது .

இந்தியா முழுவதும் 6 மாதங்கள்  ஊரடங்கு  அமலில் இருக்குமா?

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றால் நமக்கு பிரியமான பலரை இழந்துள்ளோம். கொரோனா 2வது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டத்தின் கீழ் தீபாவளி பண்டிகை வரையில், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ரேசன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படும். நவம்பர் மாதம் வரை செயல்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்தின் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் 6 மாதங்கள்  ஊரடங்கு  அமலில் இருக்குமா?

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ம் தேதி வருகிறது. தீபாவளி வரைக்கும் ரேசன் பொருட்கள் இலவசம் என்று அறிவித்திருப்பதால், 6 மாதங்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதைத்தான் சூசகமாக சொல்லி இருக்கிறாரா பிரதமர்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.