செல்போனும் தரல; கல்யாணத்துக்கும் கூட்டிட்டு போகல : தூக்கில் தொங்கிய 6 ஆம் வகுப்பு மாணவன்!

செல்போனும் தரல; கல்யாணத்துக்கும் கூட்டிட்டு போகல : தூக்கில் தொங்கிய 6 ஆம்  வகுப்பு மாணவன்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மார்த்தாண்டம்பட்டியை சேர்ந்தவர் சீனிமுருகன் – ஜோதிமணி தம்பதி. இவர்களுக்கு மதன் மற்றும் பாலகுரு என்ற இரு மகன்கள் உள்ளனர். மதன் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பாலகுரு 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அண்ணன் தம்பி இருவரும் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தாய் மற்றும் தந்தையின் செல்போனை எடுத்து இவர்கள் விளையாடி வருவதும் , அதனால் சண்டை ஏற்றுக்கொள்வதும் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது.

செல்போனும் தரல; கல்யாணத்துக்கும் கூட்டிட்டு போகல : தூக்கில் தொங்கிய 6 ஆம்  வகுப்பு மாணவன்!

நேற்று காலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மதன் பள்ளிக்கு சென்று விட பாலகுரு வீட்டில் இருந்துள்ளார். அப்போது தந்தை சீனி முருகன் வேலைக்கு சென்று விட்ட நிலையில் தாய் ஜோதிமணி உறவினர் வீட்டு திருமணத்திற்கு கிளம்பியுள்ளார். தானும் திருமணத்திற்கு வருவதாக கூறி அடம்பிடித்துள்ளார் பாலகுரு. ஆனால் ஜோதிமணி வீட்டிலேயே இருக்கும்படி கூறியுள்ளார். வீட்டிலேயே இருக்க வேண்டுமென்றால் செல்போன் தந்து விட்டு செல்லுங்கள் என்று பாலகுரு கேட்டதாக தெரிகிறது. ஆனால் அதற்கு தாய் ஜோதிமணி மறுப்பு தெரிவித்துவிட்டு உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார். திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஜோதிமணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

செல்போனும் தரல; கல்யாணத்துக்கும் கூட்டிட்டு போகல : தூக்கில் தொங்கிய 6 ஆம்  வகுப்பு மாணவன்!

ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகன் பாலகுரு தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு ஜோதிமணி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.