Home இந்தியா அந்த ஓட்டலுக்கு மட்டும் தினமும் வரும் ஸ்பெஷல் வாடிக்கையாளர் - 6 வருட ஆச்சரியம்

அந்த ஓட்டலுக்கு மட்டும் தினமும் வரும் ஸ்பெஷல் வாடிக்கையாளர் – 6 வருட ஆச்சரியம்

பழகும் விதத்தில் பழகினால் பறவைகளும் மனிதர்களிடம் நட்பு வைத்துக்கொள்கின்றன. பெரும்பாலும் மிகவும் அச்ச உணர்வுடனேயே மனிதர்களிடம் பழகும் காகங்கள் சில மனிதர்களிடம் நெருக்கமானநட்பு வைத்திருப்பதும் ஆச்சரியப்படுத்துகிறது.

கேரளாவில் உள்ள ஓட்டலுக்கு ஒரு காகம் தினந்தோறும் வந்து செல்கிறது. ஒரு நாளைக்கு ஆறு ஏழு முறை அந்த ஓட்டலுக்கு வருகிறது அந்த காகம். இப்படி கடந்த 6 வருடங்களாக அந்த காகம் தவறாமல் அந்த ஓட்டலுக்கு வந்து செல்கிறது.

கடை முதலாளியும் அந்த காகத்திற்கு ஒவ்வொரு முறை வரும்போது ஒவ்வொன்றை தருகிறார். அந்த காகமும் வாங்கிச்செல்கிறது. காலை 6 மணிதொடங்கி மாலை 6 மணிக்குள் ஆறு ஏழு முறைவந்து செல்லும் அந்த காகம், கடையில் எத்தனை கூட்டம் இருந்தாலும் யாரையும் கண்டு மிரளாமல், யாருக்கும் தொந்தரவு தராமல் பலகாரம் இருக்கும் கண்ணாடி பீரோவின் மீது வந்து உட்கார்ந்து கொள்கிறது. அதைக்கவனித்துவிட்டதும் கடை முதலாளி வந்து பட்சனத்தை கொடுக்கிறார். அதை வாங்கிக்கொண்டு பறந்து சென்றுவிடுகிறது.

இதைப்பார்த்துவிட்டு கடைக்கு வருவோர் ஏதாவது கொடுத்தால் அதை வாங்க மறுத்துவிடுகிறது அந்த காகம். இத்தனை ஏன்…அந்த கடை முதலாளியின் மனைவி தந்தால் கூட வாங்கிக்கொள்ள மறுக்கிறது. அவர் கொடுத்தால் மட்டுமே வாங்கிக்கொள்கிறது.

காலையில் 6 மணிக்கு, அப்புறம் 8.30 மணிக்கு, 9.30 மணி, 11 மணி, 12.30 மணி, 3 மணி, 5.30 மணி என்று ஒவ்வொரு முறை வரும்போதும் ஒவ்வொரு உணவுப்பொருளை தருகிறார். காலை 6 மணிக்கு பப்படம் , அப்புறம் உளுந்து வடை, அவித்த முட்டை, பொறித்த மீன் என்று தினமும் ஒவ்வொரு வேளைக்கும் ஒரு உணவு தருகிறார். ஒருநாளைக்கு ஒரு முறை கொடுத்த உணவை மீண்டும் கொடுத்தால் வாங்க மறுத்துவிடுகிறது அந்த காகம்.

அந்த காகத்தின் மீதுள்ள பாசத்தினால் கொஞ்சமும் சளைக்காமல் இப்படி கடந்த 6 வருடங்களாக உணவு வழங்கி வருகிறார் அந்த ஓட்டல் முதலாளி.

கேரளாவில் இதே போல் ஒரு மீன் வியாபாரி ஒரு காகத்திற்கு தினமும் மீன்கொடுத்து பழக்கபடுத்தி இருக்கிறார். அந்த காகமும் தினமும் வந்து அந்த வியாபாரியிடம் மீன் வாங்கி செல்கிறது. அதுவும் தனக்கு பிடித்த மீனைத்தான் அது கேட்டு வாங்கிச் செல்கிறது.

மத்தி மீன் மற்றும் பல மீன்களை எடுத்து நீட்டினால் முகத்தை திருப்பிக்கொள்கிறது. அயிலை மீனைத்தான் அந்தகாகம் விரும்பு வாங்கிச்செல்லும் என்றும் அவருக்கு தெரிந்திருந்தும் விளையாட்டுக்காக அவரும், அயிலை மீன் ரொம்ப காஸ்ட்லி. வேணும்னா மத்தி வாங்கிக்கோ என்று சொல்ல, அந்த காகம் கத்துகிறது. சரி,சரி என்று சொல்லிவிட்டு அயிலை மீனை எடுத்துக்கொடுத்ததும் வாயில் கவ்விக்கொண்டு பறந்து செல்கிறது அந்த காகம்.

கேரளாவில் இப்படியும் மனிதர்களும் காகங்களும் இருப்பது ஆச்சரியம்தான்.

மாவட்ட செய்திகள்

Most Popular

27 ஆம் தேதி வெளியே வரும் சசிகலாவால் ஆட்டம் காணப்போகிறார் எடப்பாடி- முக ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் – எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க சிலர் முயற்சி ஆனால் இங்கு யாரும் நுழைய முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு...

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ. மீது தாக்குதல்- தொழிலதிபர் கைது

கோவை கோவையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய தனியார் மில் உரிமையாளரை போலீசார் கைதுசெய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம்...

“சசிகலாவை விமர்சித்ததால் வளர்மதி ஆவேசம்! கலைஞர், ஸ்டாலின் மனைவி பற்றி பேசட்டுமா?”

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர்,...
Do NOT follow this link or you will be banned from the site!