68 ஆயிரம் பேர் ஒரே நாளில் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

 

68 ஆயிரம் பேர் ஒரே நாளில் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆனால், இன்னும் ஓரிரு நாளில் இரண்டாம் இடத்திற்குச் சென்றுவிடும் அபாயமும் உள்ளது. ஏனெனில், இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலுக்கும் நமக்கும் இடையே வித்தியாசம் மிகக் குறைவாகவே உள்ளது.

கொரோனா நோய்த் தொற்று அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகியவைதான் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இதில் அமெரிக்கா 63,10,783 நோய் பாதிப்பு உள்ளது. அதற்கு அடுத்து இருக்கும் பிரேசிலில் கொரோனா பாதிப்பு , 40 லட்சத்து ஆயிரத்து 422 பேர். இந்தியாவில் 39 லட்சத்து 60 ஆயிரத்து 048 பேர்.

68 ஆயிரம் பேர் ஒரே நாளில் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் ஒரே நாளில் 11.7 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. 

ஒருநாளில் குணமடைபவர்களின் எண்ணிக்கையில் இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 68,584 பேர் இந்தியாவில் கொவிட்-19-இல் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம், இது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 லட்சத்தை எட்டியுள்ளது (2,970,492). மேலும், இந்தியாவின் குணமடைதல் விகிதம் 77 சதவீதத்தை தாண்டியுள்ளது.

68 ஆயிரம் பேர் ஒரே நாளில் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

தற்போதைய பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.6 மடங்கு அதிகமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11.7 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் (11,72179) செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், ஒட்டுமொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 4.5 கோடியை கடந்துள்ளது (4,55,09,380).

குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், இறப்பு விகிதம் குறைவதும் ஆரோக்கியமான செய்திகளே. ஆனால், புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது வருத்தம் தரும் செய்தியாகும்.