68 கிலோ மிளகாய் அபிஷேகம்…குழந்தைகளுடன் அரிவாள்கள் மீது நடந்த பூசாரிகள்: கருப்பசாமி கோயிலின் வினோத திருவிழா!

 

68 கிலோ மிளகாய் அபிஷேகம்…குழந்தைகளுடன் அரிவாள்கள் மீது நடந்த பூசாரிகள்: கருப்பசாமி கோயிலின் வினோத திருவிழா!

68 கிலோ மிளகாய் வற்றலை அரைத்து எடுத்து அதைக்கொண்டு  அபிஷேகம் செய்யப்பட்டது. இதை காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. 

தூத்துக்குடியில் குழந்தைகளை தூக்கி கொண்டு அரிவாள்  மீது நடந்த வினோத திருவிழா நடைபெற்றது.

ttn

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த விழாவில் முக்கிய நாளான இன்று அறிவாள் கள்  மீது நின்று குறிசொல்லும் வினோத நிகழ்வு நடந்தது. அப்போது கோயில் பூசாரி பளபளக்கும் அரிவாள்கள் மீது நின்றபடி அருள்வாக்கு கூறினார்.  குழந்தை வரம் வேண்டியிருந்தவர்கள் இந்தாண்டு தனக்கு குழந்தைகளை பூசாரியின் கையில் தர, அவர் குழந்தையுடன்  அரிவாள்களின் மீது நடந்து வந்தார். இவ்வாறு 68 முறை பூசாரி நடந்து அருள்வாக்கு சொன்னார். 

ttn

இதையடுத்து கோவில் பூசாரிகள் காமராஜ் , முருகேசன் இருவருக்கும் 68 கிலோ மிளகாய் வற்றலை அரைத்து எடுத்து அதைக்கொண்டு  அபிஷேகம் செய்யப்பட்டது.  இதை காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.