ஜெயிலுக்குப் போன 2-வது கேப்டன் அனிதா! பிக்பாஸ் 67-நாள்

 

ஜெயிலுக்குப் போன 2-வது கேப்டன் அனிதா! பிக்பாஸ் 67-நாள்

ரோபோ டாஸ்க் என்பது பிக்பாஸ் வீட்டுக்குள் நடப்பது மட்டுமல்லாமல் போட்டியாளர்கள் வெளியே வாந்த வாழ்க்கையையும் கேள்வி கேட்பது, அவர்களின் குணாதிசயங்களை விமர்சனம் செய்வது, அவர்கள் பேசும் விதத்தை நக்கலடிப்பது… பலவிதங்களில் சென்றதால், இதன் எதிரொளிப்பு வெவ்வேறு வகைகளில் வெளிப்படும் என்பது முன்கூட்டியே யூகித்த ஒன்றுதான். ஆனால், வெடித்த நபர்களும் பாதித்த நபர்களும்தான் ஆச்சர்யமானார்கள். அது குறித்து கட்டுரையில் பார்ப்போம்.

66-ம் நாள் தொடர்ச்சி…

அர்ச்சனா அண்ட் கோ மனிதர்களாகி, பாலா குழுவின் ரோபோக்களை சிரிக்க, கோபப்பட, அருவெறுப்பு அடைய வைக்க வேண்டும். அதன்படி, பாலா, அனிதா இருவருக்கும் முட்டை பிடிக்காது என்பதால் அவர்களை முட்டையை முகர்ந்து பார்க்கச் சொல்லியும், வாயில் கொப்பளிக்கச் செய்தும் டாஸ்க் கொடுத்தார்கள். இவர்கள் எதிர்பார்த்ததுபோல அவர்கள் அருவெறுப்பு அடைய அவுட்டானார்கள்.

ஜெயிலுக்குப் போன 2-வது கேப்டன் அனிதா! பிக்பாஸ் 67-நாள்

அதன்பின் ஆரியைத் தவிர மற்றவர்கள் ரோபோ தன்மையை இழந்தார்கள். அனிதாவை நியூஸ் ரீடிங் பண்ணும் டாஸ்க்கை எப்போதுதான் நிறுத்துவார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், நேற்று ஒரு வரி தமிழில் ஒரு வரி ஜிப்ரிஷ் என நியூஸ் சொல்ல வைத்தது நல்லாகத்தான் இருந்தது.

வெளியே, ‘முட்டையின் மஞ்சள் கரு தொண்டைக்குள் சிக்க, அதை வெளியே எடுத்தேன். அதனால் நான் அவுட் இல்லை. இது அன் ஃபேர்’ என ஷிவானியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ‘இல்ல பாலா, உடல்ரீதியாக ஏதேனும் செய்ய சொன்னால் நீ செய்துடுவ… அதனால இப்படி ஒரு ட்ரிக் செய்தார்கள்’என ஷிவானி சொன்னார். பாலாவை எதிர்த்து விமர்சனம் செய்ததது ஷிவானிதானா… என்று பிக்பாஸ்க்கே ஒருமுறை சந்தேகம் வந்திருக்கும்.

ஜெயிலுக்குப் போன 2-வது கேப்டன் அனிதா! பிக்பாஸ் 67-நாள்

அப்போதுதான் தனக்கு குறும்படம் போட்டது எவ்வளவு வேதனையாக இருந்தது தெரியுமா… தனி ஆள் தனி ஆள்னு சொல்லிட்டு இருந்த பாலா, முதன்முறையாக எனக்கு யாரும் சப்போர்ட்டே பண்ணலன்னு வருத்தப்பட்டார். அழக்கூடச் செய்தார். அவர் அழுதால் ஷிவானி மனம் தாங்குமா.. ஷிவானி.. ஷிவானி…

67-ம் நாள்

வேக்கப் சாங் ஒலிக்க விடாமல், தீம் மியூசிக் மட்டும் போடார் பிக்கியின் தம்பி. வழக்கமாக ஆட்டத்துடன் ஆரம்பித்தது நாள். அனிதா மட்டும் ஏதோ சோகத்தில் நின்றிருந்தார். அது அன்றைய நாளின் குறியீடு போல தோன்றியது.

பெஸ்ட் பெர்ஃபார்மர்ஸ் இருவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்ல, பெரும்பான்மையோர், ரம்யா, பாலாவைச் சொல்ல இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அடுத்து எல்லாவற்றிலும் சிறந்த பர்ஃபார்மர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். பலரும் நிஷாவை முன் மொழிந்தார்கள். ’அனிதா, கேப்டன் என்பதால் சொல்ல முடியாது இல்லையா…” என ஒரு பேருக்கு பாலா பேச ஆரம்பிக்க, ‘நீ ஒரு ஆளாவது சொல்லேன்’ என்றார் அனிதா. அப்படிக் கேட்டுமே அவர் மாற்றித்தான் சொன்னார். பாலா சொன்னதும் நிஷாதான். இங்கிருந்தே அனிதாவுக்கு ஓர் அழுத்தம் உருவாகி விட்டது.

ஜெயிலுக்குப் போன 2-வது கேப்டன் அனிதா! பிக்பாஸ் 67-நாள்

அடுத்து, மோசமான போட்டியாளர் இருவரைத் தேர்ந்தெடுக்கும் வைபவம்… சிலர் அர்ச்சனா, ஓரிருவர் கேபி எனப் போய்க்கொண்டிருந்தாலும், பலர் அனிதா, ரமேஷை முன்மொழிந்தார்கள். அதுவும் ரியோ சொன்னதும் அனிதா வெகுண்டு எழுந்து விட்டார். இப்போது அல்ல, அவர் பெயரை எதற்கு சொல்லி காரணம் சொன்னாலும் உடனே விவாதமாக்க அவர் தயங்குவதே இல்லை. நல்ல பழக்கம்தான். ஆனால், அதையே மற்றவர்கள் தனக்குச் செய்யும்போது அவர் நேர்மையாகக் கையாள்வதில்லை என்ற விமர்சனமும் உண்டு.

ரோபோக்களுக்கு பெயர் வைத்ததில் தமக்கு உடன்பாடு இல்லை என ரியோ அனிதாவை செலக்ட் செய்ய, அது குழு முடிவு, அதைச் சொன்னது மட்டுமே நான் என வாதாடினார்; சண்டை போட்டார். ஆனால், அனிதா இதையே நிதானமாக ஆரியைப் போல முன்வைத்திருந்தால் சூழலே மாறியிருக்கலாம். இந்த சூழல் அப்படியே நீடிக்க, பலரும் அனிதா மற்றும் ரமேஷைச் சொல்ல ஜெயிலுக்குச் செல்லும் இரண்டாம் கேப்டனாக அனிதா தேர்வாகினார்.

ஜெயிலுக்குப் போன 2-வது கேப்டன் அனிதா! பிக்பாஸ் 67-நாள்

அனிதாவுக்குத் தான் ஜெயிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது தாங்க முடியாத் அகோபத்தை ஏற்படுத்து விட்டது. வெளியே நின்று கடுமையாகச் சத்தம் போட்டார். ‘தனியா ஆடற ஆளை எல்லாம் காலி பண்ணிட்டு நீங்க டைட்டில் வாங்கிக்கோங்க…’ என ரியோவையும் லவ் பெட் டீமையும் திட்டித் தீர்த்தார்.

அனிதா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோது டைட்டில் வெல்லும் எண்ணம் இருப்பதாக அவரின் நடவடிக்கைகள் தெரியவில்லை. ஆனால், பல முறை மக்களால் காப்பாற்றப்பட்டதால் டைட்டில் வெல்லும் ஆசை அவருக்கு இப்போது வந்திருக்கிறது. அதனால், இப்படி தீவிரமாகப் பேசியிருக்கிறார். ஆரியும் ரம்யாவிடம் இது சரியானதல்ல என்று சொல்லிட்டு இருந்தார்.

ஜெயிலுக்குப் போன 2-வது கேப்டன் அனிதா! பிக்பாஸ் 67-நாள்

அனிதாவை ரியோ ஜெயிலுக்கு அனுப்ப செலக்ட் பண்ணியதுமே அவரது டீம் ஓரிருவர் தவிர மற்றவர்கள் அனிதாவைச் சொல்லிவிட்டார்கள். ஒருவகையில் அனிதா சொல்வதுபோல இது நம்பர் கேம்தான் போல.

இந்தச் சண்டை இன்னும் முடியவில்லை இன்றைய எப்பிசோட்டிலும் அது நீடிக்கும் என்றே தெரிகிறது.