‘இதுவரை இல்லாத அளவில்’ ஒரே நாளில் 67,000 பிசிஆர் பரிசோதனை : சுகாதாரத்துறை தகவல்

 

‘இதுவரை இல்லாத அளவில்’ ஒரே நாளில் 67,000 பிசிஆர் பரிசோதனை : சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒரு நாளைக்கு பாதிப்பு 5,000ஐ கடந்து செல்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு என்றாலும், பாதிப்பு மக்களை பீதியடைய செய்கிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப் படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே போல நாளுக்கு நாள் பரிசோதனை செய்யும் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. கொரோனா பாதிப்பு மக்களுக்கு தீவிரமடையும் முன்னரே பிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்படுவதால், இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

‘இதுவரை இல்லாத அளவில்’ ஒரே நாளில் 67,000 பிசிஆர் பரிசோதனை : சுகாதாரத்துறை தகவல்

இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 67,000 பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை அதிகரிக்க மருத்துவக்குழு பரிந்துரைத்ததன் பேரில் அதிகமாக பரிசோதனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக கடந்த ஜூலை 24 ஆம் தேதி 65,000 பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று அதனை விட அதிகமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.