• April
    07
    Tuesday

Main Area

Main



11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 67 வயது முதியவர் கைது !

 child abuse
child abuse

சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சிறுமி, கே.கே.நகரில் உள்ள தனியார்ப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் வீட்டின் அருகே 67 வயதான முதியவர் முருகன் வசித்து வருகிறார். இவர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வழக்கமாக அந்த சிறுமி, முருகனின் வீட்டைக் கடந்து தான் பள்ளிக்குச் செல்வாராம். பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் போதும் அவ்வழியே தான் செல்வாராம். 

child

அதே போல, சிறுமி பள்ளிக்குச் சென்று திரும்பி வந்த போது, சிறுமியிடம் நலம் விசாரிப்பது போல பாவனை செய்த முருகன் அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பி ஓடி அவளது தாயாரிடம் இதைப்பற்றிக் கூறியுள்ளார். அதன் பின்னர், சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், காவல் துறையினர் முருகனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், அவர் ஏற்கனவே இரண்டு முறை இதே போலச் செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.                 

2018 TopTamilNews. All rights reserved.