மோடியின் செல்வாக்கு 66%ஆக சரிந்தது; ஆனாலும் முதலிடத்தில்!

 

மோடியின் செல்வாக்கு 66%ஆக சரிந்தது; ஆனாலும் முதலிடத்தில்!

செல்வாக்கு மிகுந்த உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடியின் மதிப்பீடு சரிந்தது. ஆனாலும், பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

மோடியின் செல்வாக்கு 66%ஆக சரிந்தது; ஆனாலும் முதலிடத்தில்!

மார்னிங் கன்சல்ட் எனும் அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் மோடியின் மதிப்பீடுகளின் சரிவு இருந்தாலும், அவரின் செல்வாக்கும் 66 சதவிகிதமாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு 75 சதவிகிதமாக இருந்தது இந்த ஆண்டு 66 சதவிகிதமாக சரிந்திருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடியை 28 சதவிகிதம் பேர் ஏற்கவில்லை. இது கடந்த ஆண்டில் 20 சதவிகிதமாக இருந்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷியா, கனடா, பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி உள்ளிட்ட13க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களை விடவும் மோடிதான் முதலிடத்தில் உள்ளார்.

மோடியின் செல்வாக்கு 66%ஆக சரிந்தது; ஆனாலும் முதலிடத்தில்!

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 65 சதவிகிதம் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 63 சதவிகிதம் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 54 சதவிகித ம் பெற்று 4வது இடத்திலும், ஜெர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கெல் 53 சதவிகிதம் பெற்று 5வது இடத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 53சதவீத ஒப்புதல் மதிப்பீடு பெற்று 6வது இடத்திலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 48 சதவிகிதம் பெற்று 7 இடத்திலும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்44 சதவிகிதம் பெற்று 8வது இடத்திலும் உள்ளனர்.