அதிகரிக்கும் கொரோனா.. கூடுதல் செவிலியர்கள் நியமனம்!

 

அதிகரிக்கும் கொரோனா.. கூடுதல் செவிலியர்கள் நியமனம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசின் அறிவுறுத்தலை பின்பற்றி மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பரிசோதனையை அதிகரிப்பது கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிப்பது என தீவிரமாக களமிறங்கியுள்ளன.

அதிகரிக்கும் கொரோனா.. கூடுதல் செவிலியர்கள் நியமனம்!

இதனிடையில், மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன. பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் செவிலியர்கள் கூடுதலாக தேவைப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடுதல் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் கூடுதலாக 660 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா.. கூடுதல் செவிலியர்கள் நியமனம்!

கடந்த ஆண்டும் இதே போன்ற நிலை ஏற்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் 6 மாத காலங்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.