ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க 6 விதமான கருவிகள்: மெக்கானிக் நாகேந்திரன் சாதனை

ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை  மீட்க 6 விதமான கருவிகள்: மெக்கானிக் நாகேந்திரன் சாதனை

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க, 6 விதமான கருவிகளை உருவாக்கி மீட்பு நடவடிக்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார் நாகையை சேர்ந்த மெக்கானிக் நாகேந்திரன்.

ஆழ்துளை கிணறுகள் தோண்டும் சிலர் அந்த குழிகளை மூடாததன் காரணமாக, குழந்தைகள் பலர் அதில் விழுந்து உயிர்பலி ஏற்படும் நாடெங்கிலும் தொடர்கின்றன.

ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை  மீட்க 6 விதமான கருவிகள்: மெக்கானிக் நாகேந்திரன் சாதனை

தவறுதலாக ஆழ்துளை கிணறுகளில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகளை உயிருடன் மீட்க வேண்டும் என்ற எண்ணம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த ஆட்டோ பழுது நீக்கும் மெக்கானிக் நாகேந்திரன் என்பவருக்கு எழுந்தது. அதனால், ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க, 6 விதமான கருவிகளை உருவாக்கி இருக்கிறார்.

8 இன்ச் அகலம் கொண்ட ஆழ்துளை கிணறுகளில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகளை எந்தவித சேதாரமும் இன்றி உயிருடன் மீட்க, இரும்பினால் ஆன 5 1/2 அடி நீளம் கொண்ட 6 உருளை கருவியை 20 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரித்துள்ளார்.

ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை  மீட்க 6 விதமான கருவிகள்: மெக்கானிக் நாகேந்திரன் சாதனை

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையின் அசைவுகளை கண்டறிய அடிபாகத்தில் கேமராவும், மேல்பாகத்தில் ஆழ்துளை கிணற்றின் அடி வரை அனுப்புவதற்கு ஏதுவாக இணைப்பு கம்பி ராடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் நேராகவோ அல்லது தவறுதலாக தலைகீழ் குழிக்குள் விழுந்துவிட்டால், சம்பவ இடத்திற்கு இந்த கருவிகளை கொண்டு சென்று உடனடியாக மீட்பு பணியை துரிதப்படுத்தி உயிருடன் குழந்தைகளை மீட்க முடியும் என நாகேந்திரன் தான் உருவாக்கிய கருவியின் மேல் நம்பிக்கையுடன் மேற்கோள் காட்டுகிறார்.

ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை  மீட்க 6 விதமான கருவிகள்: மெக்கானிக் நாகேந்திரன் சாதனை

குழந்தைகளின் தோள்பட்டையை பிடித்து தூக்கும் விதமாகவும், மணிக்கட்டுகளை பிடித்து தூக்கும் விதமாகவும் அதேபோல் தலை கீழ் குழிக்குள் விழும் குழந்தைகளை கிளிப்பிங் லாக் முறையில் கால் பகுதிகளை பிடித்து காப்பாற்றும் விதமாகவும் இந்த கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தான் உருவாக்கியுள்ள இந்த குழந்தை மீட்பு கருவிக்கு அரசு அங்கீகாரம் அளித்து ஊக்கப்படுத்தும் பட்சத்தில், கிணறு மற்றும் சாக்கடை கால்வாய்களில் சிக்கிக்கொள்ளும் கால்நடைகளை காப்பாற்றும் கருவியையும் தான் உருவாக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.