‘லட்சக் கணக்கில்’ அபராதம் வசூல்.. மாஸ் காட்டும் மாவட்ட நிர்வாகம்!

 

‘லட்சக் கணக்கில்’ அபராதம் வசூல்.. மாஸ் காட்டும் மாவட்ட நிர்வாகம்!

மதுரையில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ரூ.66 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிரடி நடவடிக்கையை கையிலெடுத்த சுகாதாரத்துறை, கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன் படி, சென்னையில் ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ.2.5 கோடிக்கு மேல் இதுவரை அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அண்மையில் அறிவித்திருந்தது.

‘லட்சக் கணக்கில்’ அபராதம் வசூல்.. மாஸ் காட்டும் மாவட்ட நிர்வாகம்!

இந்த நிலையில், மதுரையில் மாஸ்க் அணியாத நபர்களிடம் மட்டும் ரூ.66 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. அம்மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பு அதிகமாக இருக்கும் இடங்கள் சீல் வைக்கப்படுவதோடு, கட்டுப்பாட்டு பகுதிகளில் இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

‘லட்சக் கணக்கில்’ அபராதம் வசூல்.. மாஸ் காட்டும் மாவட்ட நிர்வாகம்!

மதுரையில் கிட்டத்தட்ட 25 தெருக்களுக்கு மேல் சீல் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படாததால் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையிலெடுத்துள்ளது. மாஸ்க் போடாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்கென்றே சிறப்பு குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளது. அக்குழுவினரிடம் மாஸ்க் போடாமல் சிக்கிய 26 ஆயிரம் நபர்களிடம் ரூ.66 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.