திமுக(65+40+17+37=159) – அதிமுக(13+18+40+4=75)

 

திமுக(65+40+17+37=159) – அதிமுக(13+18+40+4=75)

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி 159 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணி 75 இடங்களையும் பெற்றது. இதில், அதிமுகவும், திமுகவும் மண்டலம் வாரியாக பெற்ற வாக்குகள் விபரம்:

திமுக(65+40+17+37=159) – அதிமுக(13+18+40+4=75)

வடக்கு மண்டலத்தில்(தொண்டை மண்டலம்) உள்ள சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளில் திமுக 65 தொகுதிகளை கைப்பற்றியது. அதிமுக 13 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.

திமுக(65+40+17+37=159) – அதிமுக(13+18+40+4=75)

தென் மண்டலத்தில்(பாண்டிய மண்டலம்) உள்ள மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தென்காசி, ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் திமுக 40 தொகுதிகளை கைப்பற்றியது. அதிமுக 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றிகண்டது.

திமுக(65+40+17+37=159) – அதிமுக(13+18+40+4=75)

கொங்கு மண்டலத்தில்(மேற்கு மண்டலம்) உள்ள கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் அதிமுக 40 தொகுதிகளை கைப்பற்றியது. திமுக 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கண்டது.

திமுக(65+40+17+37=159) – அதிமுக(13+18+40+4=75)

மத்திய மண்டலத்தில் (சோழ மண்டலம்) உள்ள திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 41 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றியது திமுக. வெறும் 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது அதிமுக.