புதுச்சேரியில் மேலும் 65 பேருக்கு கொரோனா.. ஆயிரத்தை கடந்தது பாதிப்பு!

 

புதுச்சேரியில் மேலும் 65 பேருக்கு கொரோனா.. ஆயிரத்தை கடந்தது பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதாவது, முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ. 200 அபராதம் என்றும் கடைகள் மற்றும் மதுக் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் மேலும் 65 பேருக்கு கொரோனா.. ஆயிரத்தை கடந்தது பாதிப்பு!

அதேபோல் உணவு விடுதிகளில் மதியம் 2 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிடலாம் என்றும் இரவு 9 மணி வரை பார்சல் வழங்கலாம் என்றும் கூறப்பட்டது. புதுச்சேரி கடற்கரைக்கு யாரும் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்படும் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் படி, தற்போது முதல்வர் அறிவித்த கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் ஒரே நாளில் மேலும் 65 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதனால் பாதிப்பு அங்கு கொரோனா பாதிப்பு 1,011 ஆக உயர்ந்துள்ளது.