சத்தியமங்கலம் அருகே ரூ.65 லட்சம் குட்கா பறிமுதல் – 3 பேர் கைது

 

சத்தியமங்கலம் அருகே ரூ.65 லட்சம் குட்கா பறிமுதல் – 3 பேர் கைது

ஈரோடு

கர்நாடகாவில் இருந்து ஈரோட்டுக்கு லாரியில் கடத்திவரப்பட்ட 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 3 பேரை கைதுசெய்தனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், நேற்று அதிகாலை ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சத்தியமங்கலம் அருகே ரூ.65 லட்சம் குட்கா பறிமுதல் – 3 பேர் கைது

அப்போது, அதிகாலை 3 மணியளவில் கர்நாடக மாநிலம்,கொள்ளேகால் அருகே ஹனூரில் இருந்து, பல்லடத்திற்கு மக்காச்சோள மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில் போலீஸார் மறித்து சோதனை செய்தனர். அப்போது, மக்காச்சோள மூட்டைகளுக்கு அடியில் குட்கா மூட்டைகள் மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், குட்காவை கடத்திவந்ததாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த ஓட்டுநர் காந்தராஜ்(38), பல்லடத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் சுயம்புலிங்கம்(52), நீலகிரியை சேர்ந்த ரமேஷ்(30), ஆகிய 3 பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.