ஒரு வழியாக பெங்களூரில் நிர்மாணிக்கப்பட்ட 64 அடி உயர பெருமாள்!

 

ஒரு வழியாக பெங்களூரில் நிர்மாணிக்கப்பட்ட 64 அடி உயர பெருமாள்!

வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.

ஒரு வழியாக பெங்களூரில் நிர்மாணிக்கப்பட்ட 64 அடி உயர பெருமாள்!

ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரி சுமந்து சென்றது. எங்கெல்லாம் தடங்கல்கள், இடைஞ்சல்கள் வருகிறதோ அங்கெல்லாம் சிலை நிறுத்தப்பட்டு, இடையூறுகள் சரி செய்யப்பட்டு ஒருவழியாக கடந்த மாதம் 5 ஆம் தேதி சிலை, பெங்களூரு சென்றடைந்தது. வழியில் குறுக்கே வரும் பாலங்கள், கட்டிடங்கள், கடைகள், வீடுகள், ரவுண்டானா என இடித்து அகற்றப்பட்டு பெருமாள் சிலை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது. இடைஞ்சல்கள் வரும் இடங்களில் எல்லாம் பெருமாள் சிலை நிறுத்தியும் வைக்கப்பட்டிருந்தது.

சிலை நிறுவப்பட்டது

ஒரு வழியாக பெங்களூரில் நிர்மாணிக்கப்பட்ட 64 அடி உயர பெருமாள்!

வழி நெடுகிலும் மக்கள் கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை வழிபட்டதுடன் பெருமாளுக்கு தேங்காய்களை உடைத்து, கற்பூர தீபாராதனை காட்டினர். தமிழகத்தில் இருந்து பல மாத காலமாக பெங்களூருக்கு எடுத்து செல்லப்பட்ட இந்த பிரம்மாண்டமான பெருமாள் சிலை கர்நாடக மாநிலம் பெங்களூர் டவுன் பகுதியில் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.