நான்கே மாதங்களில் அதிகரித்த மருத்துவர்களின் பலி… அடங்காத கொரோனாவின் கோரதாண்டவம்!

நான்கே மாதங்களில் அதிகரித்த மருத்துவர்களின் பலி… அடங்காத கொரோனாவின் கோரதாண்டவம்!

கொரோனாவின் கோரதாண்டவத்தை எதிர்த்து மிகக் கடுமையாகப் பணியாற்றுபவர்கள் மருத்துவர்கள் தான். இரவு பகல் பாராமல் எப்போதும் பிபிஇ கிட் அணிந்துகொண்டு மக்களைக் காப்பாற்ற அயராது உழைக்கின்றனர். அவர்களின் பணி நிச்சயம் மெச்சக்கூடியது. அவர்கள் இல்லை என்றால் இந்த நிலையை விட மிக மோசமான நிலைக்கு இந்தியா சென்றிருக்கக் கூடும்.

நான்கே மாதங்களில் அதிகரித்த மருத்துவர்களின் பலி… அடங்காத கொரோனாவின் கோரதாண்டவம்!

கொரோனா நோயாளிகளிடமிருந்து நமக்கு தொற்று பரவ கூடாது என்று அறிவுரை கூறும் அவர்கள், 24 மணி நேரமும் கொரோனா நோயாளிகளுடனே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் கொஞ்சம் கவனமாக இல்லாவிட்டாலும் கொரோனாவால் எளிதில் தாக்கப்படுவார்கள். அதேபோல முன்பை விட கூடுதல் பணிச்சுமையால் அவர்களுக்கு மன அழுத்தமும் அதிகரிக்கும். இதையெல்லாம் தாண்டியே நமக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

நான்கே மாதங்களில் அதிகரித்த மருத்துவர்களின் பலி… அடங்காத கொரோனாவின் கோரதாண்டவம்!

இச்சூழலில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் இதுவரை 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டாம் அலைக்கு டெல்லில்தான் அதிக மருத்துவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அங்கு இதுவரை 109 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பிஹார் (97), உத்தரபிரதேசம் (79), ராஜஸ்தான் (43) உள்ளன.