64 மெகாபிக்சல் கேமரா, 6000 எம்.ஏ.ஹெச் பேட்டரி – சாம்சங் கேலக்ஸி எம்31 இந்தியாவில் அறிமுகம்

 

64 மெகாபிக்சல் கேமரா, 6000 எம்.ஏ.ஹெச் பேட்டரி – சாம்சங் கேலக்ஸி எம்31 இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலையை பொறுத்தவரை 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.14,999 என்றும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.15,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓசன் புளூ மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதன் விற்பனை மார்ச் 5-ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.

ttn

சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக 6.4 இன்ச் இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்பிளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0, டூயல் சிம் ஸ்லாட், 64 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி ஃபிளாஷ், 32 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், எஃப்.எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி, 6000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.