64 நாட்கள் கொண்டாட்டம்: D40 ஷூட்டிங் ஓவர்!

 

64 நாட்கள் கொண்டாட்டம்:  D40 ஷூட்டிங் ஓவர்!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இப்படத்தை சேர்ந்து தயாரிக்கிறது.

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷை வைத்து  D40 என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஸுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி   நடிக்கிறார்.

TTN

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும்  பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இப்படத்தை சேர்ந்து தயாரிக்கிறது.

D40

இப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 64 நாட்கள் லண்டனில் நடைபெற்று வந்தது.  அசுரன் திரைப்படத்தைக் கூட தனுஷ் லண்டனில் D40 டீமுடன் தான் கண்டுகளித்தார்.

இந்நிலையில்  D40 படத்தின்  படப்பிடிப்பு  முடிவடைந்து விட்டதாக தயாரிப்பாளர் ஷஷிகாந்த்  தனது டிவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில்  இத்திரைப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.