64 எம்.பி ரியர் கேமரா கொண்ட போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

64 எம்.பி ரியர் கேமரா கொண்ட போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே30 ஸ்மார்ட்போனின் ரீ-பிராண்டு மாடலாக போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. அட்லாண்டிஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள் மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.15,999 என்றும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.16,999 என்றும் டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ டிஸ்பிளே, டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சமாக 8 ஜிபி ரேம், அதிகபட்சமாக 256ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம், 64 எம்.பி ரியர் கேமரா, 20 எம்.பி செல்ஃபி கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஐ.ஆர் சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, ஸ்ப்ளாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, வோ-வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.