‘நிலச்சரிவிலிருந்து 14 கி.மீ தொலைவில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்’.. மூணாறு பலி 63 ஆக உயர்வு!

 

‘நிலச்சரிவிலிருந்து 14 கி.மீ தொலைவில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்’.. மூணாறு பலி 63 ஆக உயர்வு!

கடந்த 6 ஆம் தேதியன்று நள்ளிரவு கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியின் ராஜமலை தேயிலை தோட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கோர இயற்கை சீற்றத்தில் தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக கேரளா சென்ற பலர் சிக்கியதாக பரபரப்பான தகவல் வெளியானது. நிலச்சரிவால் 20க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாகி, சகதிக் காடாக காட்சியளித்தது. அதனால் நிலச்சரிவில் சிக்கிய மக்கள் மண்ணில் புதையுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

‘நிலச்சரிவிலிருந்து 14 கி.மீ தொலைவில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்’.. மூணாறு பலி 63 ஆக உயர்வு!

தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முதற்கட்டமாக 15 பேரை உயிருடன் மீட்டனர். அதன் பிறகு மீட்கப்பட்டவை எல்லாமே சடலங்கள் தான். மொத்தமாக நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. நேற்றைய நிலவரத்தின் படி மொத்தமாக 62 சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து 14 கிமீ தொலைவில் ஒரு பெண்ணின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரும் நிலச்சரிவில் சிக்கியவர் தானாம். இதனால் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.