61 எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!எதிர்க்கட்சி தலைவரானார்!

 

61 எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!எதிர்க்கட்சி தலைவரானார்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 65 தொகுதிகளை கைப்பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர இருக்கிறது. இதை எடுத்து எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து முடிவு செய்ய அதிமுக எம்எல்ஏ கூட்டம் கடந்த 7ஆம் தேதி அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார். அதேபோலவே ஓ. பன்னீர்செல்வம் தனக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

61 எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!எதிர்க்கட்சி தலைவரானார்!

இரண்டு பேருமே இறுதிவரைக்கும் பிடிவாதமாக இருந்ததால் நான்குமணி நேரமாக நடந்த அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இதையடுத்து மீண்டும் இந்த கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு இன்றைய தினத்திற்கு ஒதுக்கி வைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றும் மீண்டும் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் விடாப்பிடியாக இருந்து வருகின்றனர்.

இதனால் ஆத்திரத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை முன்மொழிந்தார் ஓபிஎஸ். ஆனால் எம்எல்ஏக்களின் பெரும்பாலோனோரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி தான் இருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.

61 எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!எதிர்க்கட்சி தலைவரானார்!

ஏழாம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் நான் இணை ஒருங்கிணைப்பாளர் ஆக இருந்தாலும் தேர்தலில் செலவு செய்தது நான் தான். 234 தொகுதிகளிலும் சுற்றி வந்து பிரச்சாரம் செய்ததும் நான்தான். அதனால் எனக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.

61 எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!எதிர்க்கட்சி தலைவரானார்!

இந்த காரணத்தாலேயே எடப்பாடி பழனிச்சாமிக்கு அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. கிட்டத்தட்ட 61 எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாக தகவல். இதனால் அதிமுகவின் சீனியர்கள் சிலர் 61 பேரின் ஆதரவு இருக்கிறது. அதனால் நீங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்து அவரை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்து, தொடர்ந்து கட்சி நல்ல வழியில் நடக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சமாதானம் பேசினர் ஓ.பன்னீர்செல்வத்திடம்.

ஒருவழியாக ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்ததால், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.