கொரோனாவால் ஒரே நாளில் 6,148 பேர் பலி… அதிரவைக்கும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

 

கொரோனாவால் ஒரே நாளில் 6,148 பேர் பலி… அதிரவைக்கும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 6,148 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் குறையத்தொடங்கியுள்ளது. ஆரம்பக்கட்டத்தில் பாதிப்பு 4 லட்சத்துக்கு மேல் இருந்த நிலையில், தற்போது தொடர்ந்து 3ஆவது நாளாக பாதிப்பு ஒரு லட்சத்துக்கு கீழ் பதிவாகிறது. அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றினால் இந்தியா இன்னும் ஒரு சில வாரங்களில் இயல்பு நிலைக்கு திரும்பும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் ஒரே நாளில் 6,148 பேர் பலி… அதிரவைக்கும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கொரோனாவுக்கு ஒரே நாளில் 6,148 பேர் பலியாகி இருப்பதாகவும் 1,51,367 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 11,67,952 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஒரே நாளில் 6,148 பேர் பலி… அதிரவைக்கும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனா மரணம் இதுவரை 6 ஆயிரத்துக்கு மேல் பதிவானதில்லை. கடந்த 24 மணி நேரத்தில் 6148 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், பீகார் மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை திருத்தம் செய்யப்பட்டது தான். பலி எண்ணிக்கை திருத்தப்பட்டதால் பீகாரில் 3,971 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.