திருவள்ளூர்: 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் – தொடுகாடு மக்கள் மனு

 

திருவள்ளூர்: 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் – தொடுகாடு மக்கள் மனு

திருவள்ளூர் அடுத்த தொடுகாடு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தன்னிச்சையாக அரசு ஒப்புதல் ஏதுமின்றி வீடுகளை காலி செய்ய சொல்லி தண்டோரா போட்டது மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழந்து வரும் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சியில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு குடும்ப அட்டை, மின் இணைப்பு, வழங்கப்பட்டும், வீட்டு வரி செலுத்தியும் வருகின்றனர். இதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில் நேற்று திடீரென முன்னாள் ஊராட்சி மன்றத் தலவைர் பத்தினி என்பவரின் கணவர் நாகராஜ் என்பவர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து வீடுகளை இடிக்க முயற்சி செய்துள்ளார். மேலும், தண்டோரா மூலம் வீடுகளை காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

திருவள்ளூர்: 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் – தொடுகாடு மக்கள் மனு

இந்த இடம் கோயிலுக்கு சொந்தமான இடம் என்றும் உடனடியாக காலி செய்யாவிட்டால் இடித்து தள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இதை யார் செய்ய சொன்னது என்று கிராம மக்கள் கேட்டதற்கு முன்னாள் தலைவர் பத்மினியின் கணவர் நாகராஜ் என்பவர் தான் என்று கூறியதால் அதிரிச்சி அடைந்த கிராம மக்கள் சென்று கேட்டுள்ளனர். அப்போது 20 ரவுடிகளை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டவும் செய்துள்ளனர்.

கடந்த 20 வருடங்களாக தலைவராக இருந்தவர் தற்போது தோல்வி அடைந்ததால் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், அரசு தரப்பில் தண்டோரா போடச்சொல்லாமல் தனிப்பட்ட நபர் சொல்லி தண்டோரா போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி வாழும் எங்களக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை அளித்தனர்.