கண்மாயில் வளர்த்த 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் மர்ம மரணம் – வேதனையில் விவசாயி

 

கண்மாயில் வளர்த்த 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் மர்ம மரணம் – வேதனையில் விவசாயி

தேனி

வருசநாடு அருகே கண்மாயில் வளர்க்கப்பட்ட 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கண்மாயில் வளர்த்த 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் மர்ம மரணம் – வேதனையில் விவசாயி

ஆண்டிபட்டி அடுத்த கடமலைமயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வருசநாடு பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கெங்கன்குளம் கண்மாய் உள்ளது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான இந்த கண்மாயில் முருகன் என்ற விவசாயி கட்லா, மிருகால், ஜிலேபி உள்ளிட்ட வகைகளை சேர்ந்த 60 ஆயிரம் மீன் குஞ்சுகளை வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களாக கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், அவர் சின்னசுருளி ஆற்றுநீரை கண்மாயில் அதிகளவில் தேக்கிவைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு கண்மாயில் இருந்த மீன்குஞ்சுகள் அனைத்தும் மர்மமான முறையில் உயிரிழந்து மிதந்து காணப்பட்டது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு போலீசார், கண்மாயில் இறந்து கிடந்த மீன்குஞ்சுகளை பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மீன் குஞ்சுகள் எவ்வாறு இறந்தது என்றும், வேறு யாரும் விஷத்தை தெளித்து விட்டார்களா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

கண்மாயில் வளர்த்த 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் மர்ம மரணம் – வேதனையில் விவசாயி

இதுகுறித்து பேசிய விவசாயி முருகன், கண்மாயில் இதுபோன்ற சம்பவம் முதன்முறையாக நடைபெற்றதாகவும், மீன்குஞ்சுகள் இறந்ததற்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றும் கூறினார். மேலும், இறந்த மீன்குஞ்சுகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த முருகன், சோதனை முடிவு வந்த பிறகே மீன்குஞ்சுகள் இறப்புக்கான காரணம் தெரியும் என்றார். மேலும்,பாதிப்படைந்த தமக்கு தேனி மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.