“கொரோனா தடுப்புப் பணிக்கு ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் விஜயபாஸ்கர்!

“கொரோனா தடுப்புப் பணிக்கு ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ரூ 6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோட்டாரில் அரசு ஆயுர்வேத கல்லூரியில் ஆய்வு செய்தார் விஜயபாஸ்கர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கொரோனா தடுப்புப் பணிக்காக மத்திய அரசிடம் 3000 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“கொரோனா தடுப்புப் பணிக்கு ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் விஜயபாஸ்கர்!

மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 25 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், 2000 டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை தர அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறினார்