darbar
  • February
    06
    Thursday

Main Area

Main



ஐ.டி ஆட்டோமேஷன் துறையில் 600 பேருக்கு வேலை! ஆப்வியூஎக்ஸ் திட்டம்

ஆப்வியூஎக்ஸ்
ஆப்வியூஎக்ஸ்

ஐ.டி ஆட்டோமேஷன் துறையில் சாதனைகள் படைத்து வரும் ஆனந்த புருஷோத்தமன், ஆப்வியூஎக்ஸ் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 600 பேருக்கு வேலை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

anand

2015ம் ஆண்டு ஆப்வியூஎக்ஸ் என்ற ஐ.டி ஆட்டோமேஷன் நிறுவனத்தைத் தொடங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஆனந்த புருஷோத்தமன். இவருடைய ஆப்வியூஎக்ஸ் மூலம் நிதி நிறுவனங்கள், சில்லறை விற்பனையகங்கள், மருத்துவத்துறை, எண்ணெய்- எரிவாயு நிறுவனங்கள் என பல துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களுக்குச் சேவை அளித்து வருகிறார். நிறுவனத்தின் எதிர்கால திட்டம் குறித்து அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

app viewx

"இந்தியாவில் விற்பனை, வாடிக்கையாளர்களுக்கான விநியோகம் உள்ளிட்டவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் முழுமையான தகவல் தொழில்நுட்ப தானியங்கி தளத்தைப் புதுமையான முறையில் வழங்கி வருகிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் மூலம் 600 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த 6 ஆண்டுகளில் 100 சதவிகித வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதையொட்டி சென்னை, பெங்களூரு, கோவையில் ஆப்வியூஎக்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கத்தை மேற்கொள்ள உள்ளோம்" என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.