பெங்களூரில் இருந்து கடத்திவந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது

பெங்களூரில் இருந்து கடத்திவந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது

சென்னை

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்திவரப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சென்னை மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை

பெங்களூரில் இருந்து கடத்திவந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது

நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு மதுரவாயலில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு லாரியில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு பார்சல்கள் மாற்றப்பட்டது. சந்தேகத்தின் பேரில் ரோந்து போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

பெங்களூரில் இருந்து கடத்திவந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது

தொடர்ந்து, பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை கடத்திவந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த சிலம்பரசன்(30) மற்றும் ராயபுரத்தை சேர்ந்த சரவணன்(32) ஆகியோரை கைதுசெய்து விசாரித்தனர். அப்போது,

பெங்களூரில் இருந்து கடத்திவந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது

பெங்களூரில் இருந்து குட்காவை பெரிய பார்சல்களாக கடத்திவந்து, இரவு நேரங்களில் குட்கா தேவைப்படுவோருக்கு கொடுத்துவிட்டு, பணம் பெற்றுச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.