‘ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான திருப்போரூர் கோவில் சொத்துக்கள்’ பத்திரப்பதிவு செய்யத் தடை!

 

‘ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான திருப்போரூர் கோவில் சொத்துக்கள்’ பத்திரப்பதிவு செய்யத் தடை!

திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.60 ஆயிரம் கோடி சொத்துக்களை யாருக்கும் பத்திர பதிவு செய்யக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதியில் அமைந்திருக்கும் கந்தசாமி கோயிலுக்கு சென்னை, திருப்போரூர் உள்ளிட்ட பல இடங்களில் சொத்துக்கள் இருக்கிறது. இக்கோவிலுக்கு சொந்தமான 2.51 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து பட்டா மாற்றம் செய்ததற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கோவில் நிலம் மீட்கப்பட்டது.

‘ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான திருப்போரூர் கோவில் சொத்துக்கள்’ பத்திரப்பதிவு செய்யத் தடை!

இது போன்று, இந்த கோவில் நிலத்தை அபகரித்துக் கொள்ள பலர் காத்திருப்பதால், கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன்நாத் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலின் நிலத்தை எடுத்துக் கொள்ள 20 குழுக்கள் கண்கொத்தி பாம்பாக காத்திருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து கந்தசாமி கோயில், ஆளவந்தான் கோயில் ஆகியவற்றுக்கு சொந்தமான ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களையாருக்கும் பத்திர பதிவு செய்யக்கூடாது என திருப்போரூர் சார் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.