Home தமிழகம் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 % பெற்றோர் ஆதரவு?

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 % பெற்றோர் ஆதரவு?

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமா அல்லது ரத்து செய்ய வேண்டுமா என்பது குறித்து மாணவர் மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 % பெற்றோர் ஆதரவு?
பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 % பெற்றோர் ஆதரவு?

மத்திய அரசு சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ள நிலையில் தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்த வேண்டுமா அல்லது ரத்து செய்ய வேண்டுமா என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து முடிவு எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ஆன்லைன் மூலம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதில் வாட்ஸ்அப் மூலமாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு தனித்தனியாக பதில்கள் தரப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் வசதி இல்லாத பெற்றோர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கருத்து கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இன்று மாலைக்குள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் பெரும்பாலான பெற்றோர்கள் கொரோனா தொற்று முடிந்த பிறகு கட்டாயம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என கூறியதாகவும், 60 % பெற்றோர் பொதுத்தேர்வை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 % பெற்றோர் ஆதரவு?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நடுரோட்டில் நெல்குத்திய பெண்கள்…தூத்துக்குடி பரபரப்பு

15 ஆண்டுகளாக போராடியும் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லாததால் தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து நூதன போராட்டம் நடத்தியுள்ளனர் பி.என்.டி. காலனி பகுதி மக்கள்.

சுத்தி சுத்தி சுழன்று அடித்த பாக்ஸர் பூஜா ராணி… அதகளமாக காலிறுதிக்கு முன்னேறினார்!

ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி என்ற செய்திகளே வட்டமடிக்கின்றன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நன்னாளாக இந்நாள் தொடங்கியிருக்கிறது....

கையாலாகாத அரசு காவல்துறை மூலம் மிரட்டுகிறது.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட...

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – அமெரிக்க வீராங்கனைக்கு ஆட்டம் காட்டிய தீபிகா குமாரி!

ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா ஒரெயொரு வெள்ளிப் பதக்கத்துடன் 42ஆவது இடத்தில் நிற்கிறது. மற்ற நாடுகள் முன்னேறிச் சென்று கொண்டிருக்க இந்தியாவோ ஒவ்வொரு நாளும் பின்தங்கி வருகிறது. முதல் நாளில்...
- Advertisment -
TopTamilNews