சின்னத்திரை படபிடிப்புக்கு 60 பேர் அனுமதி – முதல்வர் பழனிசாமி

 

சின்னத்திரை படபிடிப்புக்கு 60 பேர் அனுமதி – முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மக்கள் பணிக்கு செல்ல இயலாததால், பல தொழில் நிறுவனங்கள் முடங்கின. குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் திரைத்துறையும் முடங்கியதால், அதனை சார்ந்த தொழிலாளர்களின் நிலை கேள்விக் குறியானது. இந்த இக்கட்டான சூழலில் அவர்களுக்கு நடிகர்களும், நடிகைகளும் நிதியுதவி அளித்தனர்.

சின்னத்திரை படபிடிப்புக்கு 60 பேர் அனுமதி – முதல்வர் பழனிசாமி

தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், திரைத்துறை படப்பிடிப்புகளுக்கும் அனுமதி கோரப்பட்டது. சமீபத்தில் இது குறித்து பேசியா அமைச்சர் கடம்பூர் ராஜு, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 20 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், 20 பேரை வைத்து படப்பிடிப்பு நடத்துவது சாத்தியம் இல்லை என சின்னத்திரை தயாரிப்பாளர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் சின்னத்திரை படப்பிடிப்புக்கு 40 பேரை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

சின்னத்திரை படபிடிப்புக்கு 60 பேர் அனுமதி – முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகள் 60 பேரை கொண்டு நடத்தலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் முடக்கப்பட்ட படப்பிடிப்புகள் மீண்டும் முழு வீச்சில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.