ஆந்திராவிலிருந்து கண்டெய்னரில் கடத்திவந்த ரூ.60 லட்சம் கஞ்சா பறிமுதல்; ஓட்டுநர் கைது

ஆந்திராவிலிருந்து கண்டெய்னரில் கடத்திவந்த ரூ.60 லட்சம் கஞ்சா பறிமுதல்; ஓட்டுநர் கைது

மதுரை

ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மதுரை மாநகர் பகுதியில் கஞ்சா மூட்டைகளை ஏற்றியபடி கனரக வாகனம் ஒன்று சுற்றிவருவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஆந்திராவிலிருந்து கண்டெய்னரில் கடத்திவந்த ரூ.60 லட்சம் கஞ்சா பறிமுதல்; ஓட்டுநர் கைது

இதனை தொடர்ந்து மதுரை மாநகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் பழங்காநத்தம் அருகே வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேமடைந்த போலீசார், அந்த கண்டெய்னரில் பரிசோதனை செய்தபோது 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 350 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

ஆந்திராவிலிருந்து கண்டெய்னரில் கடத்திவந்த ரூ.60 லட்சம் கஞ்சா பறிமுதல்; ஓட்டுநர் கைது

தொடர்ந்து உசிலம்பட்டியை சேர்ந்த ஒட்டுநர் மலைச்சாமியை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து, அதனை மதுரையை சேர்ந்த சிலருக்கு விற்பனை செய்யவிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆந்திராவிலிருந்து கண்டெய்னரில் கடத்திவந்த ரூ.60 லட்சம் கஞ்சா பறிமுதல்; ஓட்டுநர் கைது

இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை நேரில் பார்வையிட்ட மாநகர காவல் துணை ஆணையர் சிவபிரசாத், மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களில் மட்டும் 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த தனிப்படையினர் தனி கவனம் செலுத்தி கண்காணித்து வருவதாகவும் கூறினார். மேலும், மதுரை மாநகர் பகுதியில் உள்ள கஞ்சா விற்பனை குற்றவாளிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.