60 லட்சம் ஆங்கிலக் கட்டுரைகளை கடந்து விக்கிபீடியா சாதனை!

 

60 லட்சம் ஆங்கிலக் கட்டுரைகளை கடந்து விக்கிபீடியா சாதனை!

பிரபல விக்கிபீடியா இணையதளத்தில் இதுவரை 60 லட்சம் ஆங்கிலக் கட்டுரைகளுக்கும் மேல் பதிவிடப்பட்டுள்ளது.

கலிபோர்னியா: பிரபல விக்கிபீடியா இணையதளத்தில் இதுவரை 60 லட்சம் ஆங்கிலக் கட்டுரைகளுக்கும் மேல் பதிவிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் என்சைக்ளோபீடியாவான விக்கிபீடியா இணையதளம் கடந்த 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தன்னார்வமாக ஆயிரக்கணக்கானோர் இதில் கட்டுரைகளை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் பதிவிட்ட கட்டுரையை உலகின் எந்த நாட்டில் உள்ளவரும் எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். உலகில் அதிகமாக பார்க்கப்படும் இணையதளங்கள் பட்டியலில் விக்கிபீடியா 10-வது இடத்தில் உள்ளது. மேலும் 309 மொழிகளை இந்த தளம் ஆதரிக்கிறது. தமிழிலும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ளன. சுமார் எட்டரை கோடி பயனர்கள் இந்த தளத்தில் ரிஜிஸ்தர் செய்துள்ளனர். 19 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்த தளத்தில் தற்போது புதியதாக ஒரு சாதனை அரங்கேற்றப்பட்டு உள்ளது.

wiki

அதாவது விக்கிபீடியா இணையதளத்தில் இதுவரை 60 லட்சம் ஆங்கிலக் கட்டுரைகளுக்கும் மேல் பதிவிடப்பட்டுள்ளது. மனிதர்கள் ஒன்றிணைந்தால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று அந்நிறுவனத்தில் பணிபுரியும் தலைமை ஊழியர் ரையான் மெர்க்லே தெரிவித்துள்ளார். ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக ஜெர்மன் மொழியில் 23 லட்சம் கட்டுரைகளும், பிரெஞ்ச் மொழியில் 21 லட்சம் கட்டுரைகளும் பதிவிடப்பட்டுள்ளன. தமிழ் மொழியை பொறுத்தவரை சில ஆயிரங்களாக இது உள்ளது. எனவே தமிழில் எழுதும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு பிடித்த டாபிக்குகளில் கட்டுரைகளை எழுதி விக்கிபீடியாவில் பதிவிடலாம் என தமிழ் மொழி ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.