60 கி.மீ வேகத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய இளைஞர்… லைவ் ஸ்ட்ரீமிங் செய்ததால் சிக்கினார்!

 

60 கி.மீ வேகத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய இளைஞர்… லைவ் ஸ்ட்ரீமிங் செய்ததால் சிக்கினார்!

அமெரிக்காவின் கென்னட்சர்கியூட் என்ற பகுதியில் ஒரு கார் வேகமாக ஓடியது. இந்த காட்சி அனைத்தும் ஃபேஸ்புக்கில் கென்னட்சர்கியூட் போலீசார் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் காரின் ஸ்பீடா மீட்டர் தெரிகிறது. அதில் மணிக்கு 100 மைல் வேகத்தில் (தோராயமாக 160 கி.மீ வேகம்) செல்வது தெரிகிறது.

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் காரை ஓட்டி மோதியதை, லைவ் ஸ்ட்ரீமிங் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கென்னட்சர்கியூட் என்ற பகுதியில் ஒரு கார் வேகமாக ஓடியது. இந்த காட்சி அனைத்தும் ஃபேஸ்புக்கில் கென்னட்சர்கியூட் போலீசார் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் காரின் ஸ்பீடா மீட்டர் தெரிகிறது. அதில் மணிக்கு 100 மைல் வேகத்தில் (தோராயமாக 160 கி.மீ வேகம்) செல்வது தெரிகிறது. நெடுஞ்சாலை ரேம்பில் இருந்து வெளியேற முயலும்போது கட்டுப்பாட்டை இழந்த வண்டி உருண்டு விழுகிறது. நல்ல வேளையாக ஓட்டுநருக்குப் பெரிய அளவில் காயம் இல்லை. காரை ஓட்டிய கென்னத் ஹால்ஃபரை மீட்புப் படையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர். அதிவேகமாக கார் ஓட்டிய அந்த நபர் போதைப் பொருளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அனைத்தும் ஹால்ஃபர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து வந்துள்ளார்.

இது குறித்து போலீசார் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தொடர்பான பதிவில், “சம்பவத்தன்று 23 வயதான இளைஞர் ஹால்ஃபர் வேகமாக காரை ஓட்டியுள்ளார். அவரை போலீசார் விரட்டிவந்துள்ளனர். இந்த போலீஸ் சேஸிங் மற்றும் வண்டி வேகமாக செல்லும் காட்சிகளை ஹால்ஃபர் நேரடி ஒளிபரப்பும் செய்து வந்துள்ளார். அதிகப்படியான வேகம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை சந்தித்துள்ளது. ஹால்ஃபர் சீட் பெல்ட் அணிந்ததால் உயிர் தப்பினார். வாகனத்தை மெதுவாக பாதுகாப்பாக ஓட்டுங்கள்” என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹால்ஃபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது பொறுப்பற்ற முறையில் வண்டியை ஓட்டியது, ரத்து செய்யப்பட்ட லைசன்ஸ்ஸை வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டியது, காப்பீடு செய்யப்படாத வண்டியை ஓட்டியது, சரியாக வாகனத்தைத் திருப்பாதது, ஒரு அவுன்ஸ்க்கு மேல் மரிஜுனா என்ற போதைப் பொருளை வைத்திருந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.