6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை -போலீசார் விரட்டியபோது ரயில் முன் பாய்ந்த கொலையாளி

 

6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை -போலீசார் விரட்டியபோது ரயில் முன் பாய்ந்த கொலையாளி

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளியை பிடிக்க போலீசார் துரத்திய போது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் போலீசார் குற்றவாளியை என்கவுண்டர் செய்து விட்டதாக சிலர் குற்றம் சொல்லி வருகின்றனர்.

6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை -போலீசார் விரட்டியபோது ரயில் முன் பாய்ந்த கொலையாளி

ஹைதராபாத் பகுதியில் இருக்கும் சிங்கரெனி காலனியில் வசித்து வந்த 6 வயது சிறுமி கடந்த 9 ஆம் தேதி அன்று காணாமல் போனார். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் தீவிர தேடுதலில் மறுநாள் சிறுமியின் உடல் பக்கத்து வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணையில் பக்கத்து வீட்டு பல்லகொண்ட ராஜூ என்கிற 30 வயது இளைஞர் தான் இந்த கொடூரத்தை செய்தது தெரியவந்தது. இதை அறிந்ததும் தலைமறைவாகி விட்ட பல்லகொண்ட ராஜூ குறித்து தகவல் அளித்தால் 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை -போலீசார் விரட்டியபோது ரயில் முன் பாய்ந்த கொலையாளி

இதையடுத்து பொதுமக்கள் சிலர் கொடுத்த தகவலின் பேரில் பல்லகொண்ட ராஜூ என்பவரை கைது செய்வதற்காக போலீசார் சுற்றிவளைத்து இருக்கின்றனர். அவர்களைப் பார்த்ததும் தப்பி ஓடியிருக்கிறார் ராஜு. அப்போது ஓடும் ரயில் முன் விழுந்து விழுந்தது பலியாகிவிட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ரயில் தண்டவாளத்தில் கிடந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

ஆனால், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளியை போலீஸார் என்கவுண்டர் செய்து விட்டனர். அதற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இருந்து பலரும் சொல்லி வரும் நிலையில், குற்றவாளி ஓடும் ரயிலில் விழுந்து சாகவில்லை. போலீசார் என்கவுண்டர் செய்து விட்டனர் என்று சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். சட்டத்திற்கு எதிரானது என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.