‘டேய் நீ உயிரோடிருந்தா ஊரெல்லாம் எங்க காதலை சொல்லிடுவே’ -அக்காவின் காதலை பார்த்த தம்பிக்கு ,அவரின் காதலனால் நேர்ந்த கதியை பாருங்க..

தன்னுடைய சகோதரி காதலிப்பதை பார்த்துவிட்ட தம்பியை, அவரின் காதலன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது
உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஈத்ஜாகிர் கிராமத்தில் வசிக்கும் ஒரு 15 வயது பெண் அதே பகுதியில் வசிக்கும் 21 வயது வாலிபரை காதலித்தார் .இதனால் இருவரும் அடிக்கடி ஒன்றாக தனிமையில் சந்தித்து கூடி குலாவி வந்துள்ளனர் .இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த காதலன் தன்னுடைய காதலியை பார்க்க, அவர்களின் பெற்றோர் இல்லாத நேரமாக பார்த்து அவரின் வீட்டுக்கு வந்துள்ளார் .


அப்போது இருவரும் தனியே சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது இவர்கள் காதலை அவரின் ஆறு வயது தம்பி பார்த்து விட்டார் ,இதனால் அதிர்ச்சியடைந்த காதலன் ‘இவன் உயிரோடிருந்தா நம்ம காதலை ஊரெல்லாம் சொல்லிடுவான்’னு அவரின் காதலியிடம் சொன்னார் .
இதனால் அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவனை அருகே கூப்பிட்ட காதலன், அவனோட கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார் .
பிறகு அந்த பெண்ணின் பெற்றோர்கள் வீட்டுக்கு வந்து கேட்டபோது அந்த பெண் ,தம்பி வீட்டின் மேலிருந்து கீழே விழுந்து மயக்கமாகிவிட்டான் என்று கூறியுள்ளார் .இதனால் அவரின் பெற்றோர் சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் .அங்கு அந்த சிறுவன் இறந்து விட்டான் .’

Six-year-old boy murdered in UP [Representative image]
பிறகு சில நாள் கழித்து குற்ற உணர்வு காரணமாக அந்த பெண் தன்னுடைய தம்பியை கொலை செய்தது தன்னுடைய காதலன் என்ற உண்மையை தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிட்டார்.இதை கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் அவரின் காதலன் மீது போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Most Popular

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கோவா...

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா : 857 பேர் பலி!

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 7 லட்சத்து 03 ஆயிரத்து 371 பேர் பலியாகி...

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும்...

கன்னியாகுமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,533 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...