நாடாளுமன்றத்தில் கடும் அமளி… மம்தா கட்சி எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்!

 

நாடாளுமன்றத்தில் கடும் அமளி… மம்தா கட்சி எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்!

பெகாசஸ் என்ற மென்பொருள் இன்று இந்தியாவையே புரட்டி போட்டிருக்கிறது. இந்தியர்களின் தரவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய அரசின் கயமைத்தனம் வெட்டவெளிச்சமாகி இருப்பதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. பெகாசஸ் பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களின் போன்களை ஹேக் செய்து, அவர்களின் போன் கால்களை ஒட்டு கேட்கும் வேலை படுஜோராக அரங்கேறியிருக்கிறது. இந்த பெகாசஸ் எந்த போனிலும் ஊடுருவி அனைத்தையும் பக்காவாக ஆட்டையைப் போடும் திறன் படைத்தது.

நாடாளுமன்றத்தில் கடும் அமளி… மம்தா கட்சி எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்!

இதனை உருவாக்கியது இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனம். இந்நிறுவனத்தில் பல்வேறு உலக நாடுகளின் அரசுகள் வாடிக்கையாளர்களாக உள்ளன. அதாவது இந்த ஸ்பைவேரை பெற்றுக்கொண்டு அரசின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலரையும் வேவு பார்க்க பயன்படுத்தலாம். இதன்மூலம் இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரண்டு போன்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடும் அமளி… மம்தா கட்சி எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்!

மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் செல்போனும் மேற்குவங்க தேர்தலையொட்டி ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தயவு இல்லாமல் இந்த ஹேக்கிங் அரங்கேறியிருக்காது என்பதால், ஜூலை 19ஆம் தேதி கூடிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இதுதொடர்பாக கேள்வியெழுப்பினர். கடந்த இரு வாரங்களாக இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ எதற்கும் செவி சாய்க்காமல் மௌனம் காக்கிறது.

நாடாளுமன்றத்தில் கடும் அமளி… மம்தா கட்சி எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்!

இதனால் தினந்தோறும் கடும் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சியினர் முடக்கி வருகின்றனர். இச்சூழலில் இன்று ராஜ்யசபாவில் திரிணாமுல் எம்பிக்கள் ஆறு பேர் பெகாசஸ் தொடர்பாக நோட்டீஸ்களை காண்பித்துக் கொண்டு போராட்டாத்தில் ஈடுபட்டனர். உடனே ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அவர்களை இருக்கைக்குச் செல்லுமாறு கூறினார். ஆனால் அவர்கள் கேட்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டோலா சென், நாடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மவுசாங் நூ ஆகிய ஆறு பேரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். முன்னதாக கடந்த வாரம் மக்களவையில் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.