சுற்றுலா பயணிகளை சுற்றி வந்த பாலியல் தொழிலாளிகள் -சிறைக்கு செல்லாமல் கவுன்சிலிங் செல்கிறார்கள்.

சுற்றுலா பயணிகளை சுற்றி வந்த பாலியல் தொழிலாளிகள் -சிறைக்கு செல்லாமல் கவுன்சிலிங் செல்கிறார்கள்.

உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் ஆறு பாலியல் தொழிலாளர்கள் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் வரும் சுற்றுலாப் பயணிகளை விபச்சாரத்துக்கு அழைத்ததால் அவர்களை போலீசார் பிடித்து கவுன்சிலிங் அனுப்பினார்கள் .

சுற்றுலா பயணிகளை சுற்றி வந்த பாலியல் தொழிலாளிகள் -சிறைக்கு செல்லாமல் கவுன்சிலிங் செல்கிறார்கள்.

ஹரித்வாரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் ஆறு விபச்சாரம் செய்யும் பெண்கள் பணம் சம்பாதிப்பதற்காக அப்பகுதியில் உள்ள உள்ளூர் இளைஞர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் கூப்பிட்டதாக உள்ளூர் மக்களிடமிருந்து புகார் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஒரு போலீஸ் குழு அந்த இடத்தை அடைந்து, அந்த பெண்களை வளைத்து பிடித்தது.பிறகு கைது செய்த அனைத்து பெண்களையும் போலீசார் கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தார்கள் .

விபச்சாரம் என்பது சட்டத்தின் படி ஒரு குற்றமல்ல என்று பம்பாய் உயர் நீதிமன்றம் சில வாரங்களுக்குப் முன்பு தீர்ப்பளித்தது .அந்த தீர்ப்பில் மேலும் வயது வந்த பெண்களுக்கு தங்கள் தொழிலைத் தேர்வுசெய்ய உரிமை உண்டுஎன்றும் கூறியுள்ளது . இந்த தீர்ப்பையடுத்து சிறையில் வைக்கப்பட்டுள்ள மூன்று பாலியல் தொழிலாளர்களை விடுவிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
மார்ச் மாதத்தில் வைரஸ் தொற்றுநோயால் ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்து, மொத்தம் 30 பாலியல் தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் கூறினார்கள் .

சுற்றுலா பயணிகளை சுற்றி வந்த பாலியல் தொழிலாளிகள் -சிறைக்கு செல்லாமல் கவுன்சிலிங் செல்கிறார்கள்.