“விசிகவுக்கு 6 தொகுதிகள்” : பாஜகவால் கலக்கத்தில் திருமா

 

“விசிகவுக்கு 6 தொகுதிகள்” :  பாஜகவால் கலக்கத்தில் திருமா

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“விசிகவுக்கு 6 தொகுதிகள்” :  பாஜகவால் கலக்கத்தில் திருமா

சட்டமன்ற தேர்தலில் திமுக- விசிக இடையே 2ஆம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.பி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . முன்னதாக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என திருமாவளவன் தொண்டர்களிடம் வலியுறுத்திய நிலையில் திமுக கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 தொகுதிகளிலும் திமுக தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

“விசிகவுக்கு 6 தொகுதிகள்” :  பாஜகவால் கலக்கத்தில் திருமா

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, 15 இடங்கள் கேட்டு விருப்ப பட்டியலைக் கொடுத்த நிலையில் அதில் 9 தொகுதிகளை கேட்டதாகவும் தகவல் வெளியானது.ஆனால் எதிர்காலத்தில் பெரும்பான்மை அவசியம் என்பதால் விசிகவுக்கு ஒற்றை இலக்க எண்ணிலேயே தொகுதி பங்கீடு வழங்கப்பட்டுள்ளது.

“விசிகவுக்கு 6 தொகுதிகள்” :  பாஜகவால் கலக்கத்தில் திருமா

இதனிடையே திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை ஏற்கக் கூடாது என்று சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருமாவளவன் முன்பு விசிக தொண்டர்கள் முழக்கமிட்டனர். அவர்களை சமாதானம் செய்த திருமாவளவன், தமிழகத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்ற கொள்கைக்காக குறைவான தொகுதிகளை ஏற்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.