“ரஷ்யா பொண்ணுங்கல்லாம் வெள்ளை வெளேர்னு இருப்பாங்களாம்” – படிக்காதவர்களிடம் ஏமாந்த பட்டதாரிகள்

 

“ரஷ்யா பொண்ணுங்கல்லாம் வெள்ளை வெளேர்னு இருப்பாங்களாம்” – படிக்காதவர்களிடம் ஏமாந்த பட்டதாரிகள்


படிக்காத சிலர் சேர்ந்து, வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி படித்தவர்களை ஏமாற்றி பண மோசடி செய்ததில் போலீசில் சிக்கினார்கள்.

“ரஷ்யா பொண்ணுங்கல்லாம் வெள்ளை வெளேர்னு இருப்பாங்களாம்” – படிக்காதவர்களிடம் ஏமாந்த பட்டதாரிகள்


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மைனுதீன் முசுருதீன் ஷேக் என்ற 44வயதான நபர் ஒரு ட்ராவல் ஏஜென்சி நடத்தி வந்தார் .இவர் பள்ளிபடிப்பையே தாண்டாதவர் அதனால் குறுக்கு வழியில் பணம் ஈட்ட நினைத்தார் .
அதனால் தன்னை போல படிக்காத சபுரித் ஷேக் ஷம்சுதீன் ஷேக், (34),அமினுதீன் கோல்டர், (34); ஜெயந்த்குமார் பஞ்சனன் மண்டல், (38); அப்துல் ஹசிம் ஷேக் அஜதுல் இஸ்லாம், (33),மற்றும் 32 வயதான தாரக் மனோரஞ்சன் மொண்டல் ஆகியோரை கூட்டணியாக சேர்த்து கொண்டு இந்த ட்ராவல் ஏஜென்சியில் படித்த பலரை ஏமாற்ற முடிவு செய்தார்கள் .
அவர்களின் திட்டப்படி அவர்கள் மும்பை மற்றும் கொல்கத்தாவில் தங்களின் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை திறந்தார்கள் .அதன் பிறகு அவர்கள் வாட்ஸ் அப்பில் “ரஷ்யாவுக்கு படித்த பட்டதாரி வாலிபர்களை வேலைக்கு அனுப்புவதாகவும் ,அங்கேயே வெள்ளைக்கார பெண்களை திருமணம் செய்து குடியேறலாம்” என்று விளம்பரம் செய்தார்கள் .அந்த விளம்பரத்தை பார்த்து விட்டு பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பம் செய்தார்கள் .பின்னர் அவர்கள் அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து வெளியூரை சேர்ந்த 450வாலிபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை நேர்முக தேர்வுக்கு வர சொன்னார்கள் .பின்னர் இன்டர்வ்யூக்கு வந்த ஒவ்வொருவரிடமும் 125000 ரூபாய் பணத்தை விசா மற்றும் பாஸ்போர்ட் செலவுக்கு என்று வாங்கி கொண்டார்கள் .அதன் பிறகு அவர்களை ரஷ்யாவுக்கு அனுப்பாமலும் , பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்தனர் .இதனால் ஏமாந்த ஒருவர் புகார் போலீசில் கொடுத்தார் .மும்பை குற்றப்பிரிவு போலிஸார் வழக்கு பதிவு செய்து அந்த கூட்டத்தை பிடித்து சிறையிலடைத்தார்கள் .

“ரஷ்யா பொண்ணுங்கல்லாம் வெள்ளை வெளேர்னு இருப்பாங்களாம்” – படிக்காதவர்களிடம் ஏமாந்த பட்டதாரிகள்