விமான சேவையால் விபரீதம்! சென்னை- சேலம் சென்ற 6 பேருக்கு கொரோனா

 

விமான சேவையால் விபரீதம்! சென்னை- சேலம் சென்ற 6 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் மாத இறுதியில் இருந்து நான்கு கட்டங்களாக நாட்டில் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. சிறப்பு விமானங்கள், சரக்கு விமானங்கள் தவிர மற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டன. இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதி அளித்ததை தொடர்ந்து மே 25 முதல் நாட்டில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியது. விமான விமான நிலையங்களில் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து விட்டது. அதன்படி பயணிகள் விமான நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.

விமான சேவையால் விபரீதம்! சென்னை- சேலம் சென்ற 6 பேருக்கு கொரோனா

இந்நிலையில் சென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் சேலம் சென்ற 56 பயணிகளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் நிர்மல்சன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுவருவதாகவும் கூறினார். 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மீதமுள்ள 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.