ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

 

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்தார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மொத்தமுள்ள 785 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இருப்பினும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தினசரி ராஜீவ்காந்தி மருத்துவமனை நோக்கி படையெடுத்துவருகின்றனர். படுக்கைகள் கிடைக்காததால் அவர்கள் ஆம்புலன்சிலேயே மருத்துவமனைக்கு வெளியே பல மணி நேரம் காத்திருந்தனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வாயிலில் நிற்கும் காட்சிகள் கலங்கவைத்தது.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளில் யாரேனும் டிஸ்சார்ஜ் ஆனாலோ அல்லது இறந்தாலோதான் மற்ற நோயாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த சூழலில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 4 நோயாளிகள் உயிரிழந்தார். படுக்கைகள் முழுவதும் நிரம்பியதால், சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.