நாடெங்கும் மரண ஓலம்… ஆக்சிஜன் பற்றாக்குறையால் பஞ்சாப்பில் 6 பேர் பலி!

நாடெங்கும் மரண ஓலம்… ஆக்சிஜன் பற்றாக்குறையால் பஞ்சாப்பில் 6 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பரவலால் பல உயிர்கள் பறிபோகின்றன. அதைக் காட்டிலும் ஆக்சிஜன் இல்லாததால் தான் பெரும்பாலானோர் பலியாகின்றனர். நாட்டின் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன்களைக் கொள்முதல் செய்யும் மத்திய அரசோ மாநில அரசுகளுக்குக் கொடுக்காமல் வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

நாடெங்கும் மரண ஓலம்… ஆக்சிஜன் பற்றாக்குறையால் பஞ்சாப்பில் 6 பேர் பலி!

குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் 25 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 20 பேர் பலியாகியிருக்கின்றனர். இதற்குக் காரணம் ஆக்சிஜன் கொடுக்காதது தான் என்கின்றனர். இச்சூழலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஆறு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடெங்கும் மரண ஓலம்… ஆக்சிஜன் பற்றாக்குறையால் பஞ்சாப்பில் 6 பேர் பலி!

ஆறில் ஐந்து பேர் கொரோனா நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில், ஆக்சிஜன் பற்றாக்குறையை மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துரைத்தோம்; ஆனால் அவர்கள் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. இதனால் நோயாளிகளின் குடும்பத்தாரிடம் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தினோம் என்று கூறப்பட்டது.