6 புதிய டிவிக்கள் – ஐடெல் அறிமுகம்

 

6 புதிய டிவிக்கள் – ஐடெல் அறிமுகம்

பட்ஜெட் விலையில் செல்போன்களை விற்பனை செய்து வரும் ஐடெல் நிறுவனம் 6 புதிய டிவிக்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

6 புதிய டிவிக்கள் – ஐடெல் அறிமுகம்

செல்போன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வரும் ஐடெல் நிறுவனம், 6 டிவிக்களை அறிமுகம் செய்து அதன் மூலம் டிவி விற்பனை பிரிவில் கால்பதித்துள்ளது. ஐ சிரீஸ், சி சிரீஸ் மற்றும் ஏ சிரீஸ் என 3 வகைகளில் வெளிவந்துள்ள இந்த டிவிக்களின் விலை 8 ஆயிரத்து 999 லிருந்து தொடங்குகிறது.

இதில் 55 இன்ச் மற்றும் 43 இன்ச் என இரண்டு அளவுகளில் வெளிவந்துள்ள 4கே டிவிக்கள் முறையே 34,999 ரூபாய்க்கும், 24 ஆயிரத்து 499க்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 43 இன்ச் ஃபுல் எச்டி டிவி ஒன்று 21,999 ரூபாய்க்கும், 32 இன்ச் எச்டி ரெடி டிவி 11,999 ரூபாய்க்கும் ஐடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

6 புதிய டிவிக்கள் – ஐடெல் அறிமுகம்

இதைத்தவிர சி சீரீஸில் எச்டி இன்டெர்நெட் டிவி ஒன்றை 9,499 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தி உள்ள ஐடெல் நிறுவனம், ஏ சிரீஸில் சவுண்ட் பார் எல்இடி டிவி என்ற 32 இன்ச் டிவியை 8.999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தி உள்ளது. 9 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த விலையில் கிடைக்கும் 32 இன்ச் டிவிக்களில் ஐடெல் நிறுவனத்தின் இந்த புதிய டிவியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்