‘2,000 கிலோ வெங்காயம் பதுக்கப்பட்ட சம்பவம்’ – இடைத்தரகர் உட்பட 6 பேர் கைது!

‘2,000 கிலோ வெங்காயம் பதுக்கப்பட்ட சம்பவம்’ – இடைத்தரகர் உட்பட 6 பேர் கைது!

பெரம்பலூர் அருகே 2 ஆயிரம் கிலோ வெங்காயம் பதுக்கப்பட்ட வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கியிருக்கும் நிலையில் வெங்காய விளைச்சல் பாதிப்படைந்து வருகிறது. இது வெங்காய விலை அதிகரிப்பில் எதிரொலிக்கும் என்பதால், ஆங்காங்கே வியாபாரிகள் வெங்காய பதுக்கலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இறங்குமதி செய்யப்படும் வெங்காயங்களை பதுக்கி, விலை உயரும் போது அதிக விலைக்கு விற்க திட்டமிடப்படுவதாக தெரிகிறது.

‘2,000 கிலோ வெங்காயம் பதுக்கப்பட்ட சம்பவம்’ – இடைத்தரகர் உட்பட 6 பேர் கைது!

அப்படி திட்டமிட்ட கும்பல் தான் பெரம்பலூர் அருகே போலீசார் வசம் சிக்கியது. பெரம்பலூர் மாவட்டம் இரூர் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ வெங்காயத்தை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பதுக்கலில் ஈடுபட்ட 4 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த வெங்காயங்களை அம்மா பல்பொருள் அங்காடி மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

‘2,000 கிலோ வெங்காயம் பதுக்கப்பட்ட சம்பவம்’ – இடைத்தரகர் உட்பட 6 பேர் கைது!

இந்த நிலையில், வெங்காயங்கள் பதுக்கல் தொடர்பாக வியாபாரி பாலாஜி, இடைத்தரகர் வீரமணி, கோழிப்பண்ணை உரிமையாளர் ரவிச்சந்திரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பதுக்கப்பட்ட வெங்காயத்தின் சந்தை விலை ரூ.4 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.